• May 07 2024

ரிலீஸிற்கு முன்பாகவே பல கோடிகள்... வாரிக் குவித்து வரும் 'வாரிசு' திரைப்படம்... எப்படித் தெரியுமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநரான வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரசிகர்களின் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இவர்களோடு இணைந்து சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்


அத்தோடு இப்படத்தினை தில் ராஜு பிரமாண்டமாக தயாரிக்கின்றார். மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய படங்களில் இதுவும் ஒன்றாகக் காணப்படுகின்றது. 


இப்படமானது 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தெலுங்கில் 'வார்சாடு' என்ற பெயரில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழில் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது.


இந்நிலையில் இப்படம் குறித்த மற்றுமோர் தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே சுமார் ரூ. 10 கோடிக்கு விற்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது இதுவே விஜய்யின் திரைவாழ்க்கையில் பெஸ்ட் ஆடியோ பிஸ்னஸ் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறாக ரிலீஸிற்கு முன்பே வாரிசு திரைப்படம் பல கோடிகளை பிஸ்னஸ் மூலம் வசூலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement