• Oct 23 2025

உன்னால எப்படி நிம்மதியா சோறு திங்க முடியுது? இன்ஸ்டாவில் செருப்படி பதிவு போட்ட ஜாய்

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரம் தற்போது  மேலும் சூடு பிடித்துள்ளது.  மாதம்பட்டி தன்னை கர்ப்பமாக ஏமாற்றிவிட்டார் என்று ஜாய் கொடுத்த புகாரை அடுத்து இரண்டு பேரிடமும் சில நாட்களுக்கு முன்பு விசாரணை நடைபெற்றது.  

இதைத்தொடர்ந்து  இந்த விஷயம் பற்றி எரியத் தொடங்கி உள்ளது. இதனால் மாதம்பட்டி ரங்கராஜை தொடர்ந்து அட்டாக் செய்து வருகிறார் ஜாய். அவரை  தாக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட வீடியோக்களையும் புகைப்படங்களையும்  இறக்கிக் கொண்டே இருக்கின்றார். 

இதை அவதானித்த மாதம்பட்டி ரங்கராஜ் அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு சென்றார். ஆனால் அவருக்கு செக்மென்ட் வைத்து அனுப்பியது நீதிமன்றம்.  அதன் பின்பு இந்த பிரச்சனையை சட்டபூர்வமாக எதிர்கொள்வேன் என அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். 


இவ்வாறான நிலையில்  சம்பந்தப்பட்ட இருவரிடமும் மகளிர் ஆணையம்  விசாரணை நடத்தியது.  இந்த வழக்கு விசாரணைக்கு மாதம்பட்டி தனது முதல் மனைவியுடன்  என்ட்ரி கொடுத்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில்  பகிர்ந்த  போஸ்ட், வீடியோ பார்ப்போரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.  அதில்  'பணம் பத்தும் செய்யும் அது உன் கணக்கு.. ஒரு பெண்ணோட பாவம் உன்ன வச்சி செய்யும்...  இது ஆண்டவன் கணக்கு  மறந்துடாத... என்றும்,

ராயன் படத்தில் தனுஷ் சந்தீப் கிஷனை பார்த்து, 'உன்னால சும்மாவே இருக்க முடியாதாடா?.. எப்படி டா நிம்மதியா சோறு திங்க முடியுது?" என்று பேசும் வசனத்தை தனது ஸ்டோரியில் வைத்திருக்கிறார்..தற்போது இது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. 


Advertisement

Advertisement