• Oct 23 2025

BB9 டைட்டில் வின்னர் விஜே பார்வதி தான்.. ஆதாரத்துடன் அடித்துக் கூறிய பிரபலம்

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 9  ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் நந்தினி, பிரவீன் காந்தி வெளியேறிய நிலையில் தற்போது 18 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர். 

ஒவ்வொரு நாளும் என்ன டாஸ்க், என்ன பிரச்சனை நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்து  போட்டியார்கள் மத்தியில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. 

ஆரம்பத்தில் திவாகரை எல்லோரும்  டார்கெட் செய்து வந்தார்கள். ஆனால் தற்போது அவர் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார். அது மட்டும் இல்லாமல்  மக்களும் திவாகரை  ஆதரிக்க தொடங்கி விட்டனர். 


இந்த சீசனில் பங்கு பற்றியவர்கள் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் என்பதால் பிக் பாஸ் 9 ஆரம்பித்ததில் இருந்து பல  எதிர்ப்பு கிளம்பின.  பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், பிக் பாஸ் 9  டைட்டில் வின்னர் விஜே பார்வதி என்று பாடகி சுசித்ரா  தனது இன்ஸ்டா  பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து உள்ளார். இதோ அவருடைய பதிவு  

Advertisement

Advertisement