• May 03 2024

அவரை எப்படி இந்து அரசனாக்கலாம்- பொது மேடையில் கொந்தளித்த இயக்குநர் வெற்றிமாறன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருபவர் தான் வெற்றிமாறன். இவர் தற்பொழுது நடிகர் சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் என்னும் படத்தை இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு கலை நிகழ்வொன்று சென்னையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறனும் கலந்து கொண்டதோடு அவர் பேசிய விடயமும் வைரலாகி வருகின்றது.


அதாவது சினிமாவை திராவிட இயக்கங்கள் கைப்பற்றியதால் தான் தமிழ்நாட்டில் இன்னும் மதசார்பாற்றக தற்போது வரை விளங்கி வருவதாக கூறினார்.மேலும் கலையை சரியாக கையாள தவறினால் நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்கள் என பேசினார்.

அதேபோல் ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் பேசி இருந்தார். 


அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி தற்போது சமூகவலை தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement