• May 05 2024

"உங்களுக்காக தான் இது எப்படி இருக்கு- ஷாருக்கானுக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் ஷாருக்கான். இவர் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிலிருந்து விலகியிருந்த நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக பதான் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார்.

மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் 'பதான்' இப்படத்தை இயக்கி இருந்தார்.பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது.


 படம் வெளியாகி முதல் 5 நாளில்  543 கோடி ரூபாய்களை இந்த படம் வசூல் செய்து இந்திய அளவில் சாதனையை படைத்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. உலகளவில் தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.


இந்நிலையில் நேற்று நடிகர் ஷாருக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அவ்வப்போது #askSRK எனும் ஹேஷ்டாக் மூலமாக தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஷாருக் கான் பதிலளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று ரகர்களிடம் பல்வேறு கருத்துக்களை ஷாருக் கான் பகிர்ந்துகொண்டார்.


அப்போது ரசிகர் ஒருவர் பதான் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றின் ஓவியத்தை பகிர்ந்திருந்தார். அதில்,"உங்களுக்காக தான் ஷாருக். இது எப்படி இருக்கிறது?" என கேட்டிருந்தார். இந்த கேள்விக்கு பதில் அளித்திருந்த ஷாருக் கான்,"மிகவும் நன்றாக இருக்கிறது. உங்களுக்கு நன்றி" என  குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த டுவிட் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement