• Apr 25 2024

வாவ்... யூடியூப்பில் ரஞ்சிதமே பாடலை வெளியிட்ட படக்குழு.. கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக பல ஆண்டுகளாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். அந்தவகையில் இறுதியாக விஜய் நடிப்பில் உருவான வாரிசு படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி இருந்தது.


வம்சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷியாம், கணேஷ் வெங்கட் ராம், சம்யுக்தா, சங்கீதா, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தார்கள். அத்தோடு தில் ராஜு இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்திருந்தார். 


அஜித்தின் துணிவு படத்துடன் போட்டிக்கு வெளியான இப்படமானது முதலுக்கு மோசமின்றி பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வசூல் சாதனை நிகழ்த்தியது. அந்தவகையில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வரும் வாரிசு திரைப்படமானது இதுவரை ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது. 


இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக வாரிசு படத்தின் வீடியோ பாடல்கள் ஒவ்வொன்றாக யூடியூப்பில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது இப்படத்தில் விஜய்யும், மானசியும் இணைந்து பாடி பாட்டி தொட்டியெங்கும் ஒலித்த ரஞ்சிதமே பாடல் ஆனது வெளியிடப்பட்டு உள்ளது.


இப்பாடல் ரிலீஸுக்கு முன்பு எந்த அளவு வரவேற்பை பெற்றதோ, அதே அளவு வரவேற்பு படத்தில் இடம்பெற்ற அப்பாடலின் வீடியோவுக்கும் ரசிகர்களினால் கிடைத்திருந்தது. அதுமட்டுமல்லாது அதில் விஜய்யும், ராஷ்மிகாவும் சேர்ந்து செம்ம எனர்ஜியுடன் ஆடி இருந்தமை பலரையும் கவர்ந்திருந்தது.

இந்நிலையில் அப்பாடல் வீடியோ எப்போது ரிலீஸ் ஆகும் என ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த தளபதி ரசிகர்களுக்கு தற்போது குட் நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது ரஞ்சிதமே பாடல் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். 


மேலும் வெளியான 2 மணிநேரத்திலேயே அப்பாடல் சுமார் 3.5 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்று யூடியூப்பில் பயங்கர டிரெண்டாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement