• May 04 2024

தி லெஜெண்ட் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு Walking Stickவுடன் நடந்து வந்த தொகுப்பாளினி டிடி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் டிடி. இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாது சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

மேலும் விஜய்டிவியில் புதிதாக என்ன நிகழ்ச்சி வந்தாலும் அதனை டிடி தான் தொகுத்து வழங்கி வருவார்.காரணம் அந்த அளவிற்கு சிறப்பாக நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கி வருவார்.

மிகவும் கலகலப்பாக பிரபலங்களை பேசியே ஏதாவது ஸ்பெஷல் விஷயத்தை செய்ய வைத்து விடுவார். அண்மையில் விஜய்டிவியில் ஒளிபரப்பான விக்ரம் ஸ்பெஷல் ஷோ, விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி இருந்தார்.

அண்மையில் The Legend Movie ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை அர்ச்சனாவுடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு வரும் போது டிடி தனது கையில் Walking Stickவுடன் நடந்து வர ரசிகர்கள் ஷாக் ஆகினார்கள். ஆனால் அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலில் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement

Advertisement