• May 08 2024

வெளியானது ஹிப்ஹாப் ஆதி, வினய் நடிக்கும் 'வீரன்' படத்தின் 3ஆவது சிங்கிள்... வீடியோ இதோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'வீரன்'. ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். 


மேலும் இவர்களுடன் இணைந்து முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தினுடைய இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.


இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான 'பப்பர மிட்டாய்' பாடல் வெளியாகி வைரலாகியமையைத் தொடர்ந்து மூன்றாவது பாடலான வீரன் திருவிழா என்ற பாடல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் முத்தமிழ் எழுதியுள்ள இந்த பாடலை முத்து சிற்பி, சின்னப்பொண்ணு, பிரணவம் சசி, ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் இணைந்து பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதோ அந்தப் பாடல் வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement