• May 08 2024

கலக்கலாக வெளிவந்த... புன்னகை அரசி சினேகா நடிக்கும் 'ஷாட் பூட் த்ரீ' படத்தின் ட்ரெய்லர் வீடியோ இதோ...!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

புன்னகை அரசி நடிகை சினேகா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு நடிப்பில் 'ஷாட் பூட் த்ரீ' என்னும் புதிய திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் தற்போது அந்த படத்தின் ஒபிசியல் டெயிலர் ரிலீஸ் ஆகி இருக்கின்றது.


90 காலங்களில் புன்னகை அரசியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வலம் வந்தவர் நடிகை சினேகா. திருமணத்திற்கு பிறகு தனக்கான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வரும் சினேகா இப்போது பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து 'ஷாட் பூட் த்ரீ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தற்போது ரொம்ப பிசியாக இருக்கும் காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார் .


கலக்கலாக இருக்கும் இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே வெங்கட் பிரபு, சினேகாவின் மகன் "எனக்கு போர் அடிக்குது ஒரு தம்பி வேணும்" என்று கேட்கிறார். அதைத்தொடர்ந்து அவரின் பிறந்தநாள் அன்று  ஒரு நாயை பரிசாக கொடுக்கின்றனர். அதை தனது தம்பி போல் பார்த்துக் கொள்ளும் சினேகாவின் மகன் தன் இரண்டு நண்பர்களோடு அடிக்கும் சேட்டைகளை மையமாக கொண்டு படத்தின் கதைக்களம் அமைகிறது.


ஆனால் திடீரென பாசமாக வளர்த்த  நாய் காணாமல் போகவே பதறி அடித்துக் கொண்டு அனைவரும் தேடுகின்றனர். அதைத்தொடர்ந்து யோகி பாபுவின் கைக்கு வரும் அந்த நாய் மீண்டும் தன் உரிமையாளரிடம் சென்றதா என்ற எதிர்பார்ப்புடன் ட்ரெய்லர் முடிகிறது. குழந்தைகளின் சேட்டையை மையப்படுத்தி உருவாகி உள்ள இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இதும் ஒரு சிறந்த படமாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement