• Dec 05 2023

மார்க் ஆண்டனி திரைப்படம் 6 நாட்களில் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?- செம குஷியில் படக்குழு

stella / 2 months ago

Advertisement

Listen News!


இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


முதல் நாளில் இருந்தே மார்க் ஆண்டனி படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், ரூ. 50 கோடியை கடந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், இப்படம் வெளிவந்து ஆறு நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 66 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது கூறப்படுகிறது. 


இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் நல்ல வரவேற்பு இருக்கும் என தெரிவிக்கின்றனர்.இப்படத்தை மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement