• May 19 2024

நான்கு பெண்களைக் கடத்திய நட்டி... த்ரில்லிங்காக வெளிவந்த 'வெப்' திரைப்படத்தின் திரைவிமர்சனம் இதோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஹாரூன் இயக்கத்தில் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள தயாராகி இருக்கும் திரைப்படம் 'வெப்'. இப்படத்தில் நடிகர் நட்டி நட்ராஜ், சசஸ்வி பாலா, ஷில்பா மஞ்சுநாத், சுபப்பிரியா மலர், அனன்யா மணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

மேலும் கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் உடைய ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த நிலையில் படம் எப்படி இருக்கு என்பது குறித்த படத்தினுடைய திரை விமர்சனத்தைப் பார்ப்போம்.


கதைக்களம் 

அந்தவகையில் ஐடி வேலை மற்றும் வீக் எண்ட் பார்ட்டிக்காகவே வேலை செய்வது, மது, போதைப் பொருள்கள் என  வாழ்க்கையை வேறு விதமாக ஓட்டி வரும் மூன்று பெண்கள், டீட்டோலரான தங்கள் மற்றொரு தோழியையும் குடிக்க வைத்து ஒரு நாள் இரவு கார் ஓட்டிச் செல்கின்றனர். 

பின்னர் மறுநாள் காலை மூவரும் போதை தெளிந்து கண் விழித்துப் பார்க்கும்போது நடிகர் நட்டி நட்ராஜின் கஸ்டடியில் பாழடைந்த வீட்டில் இருக்கின்றனர். அப்போது நட்டி நட்ராஜ்  மற்றும் அவரது பெண் உதவியாளர் இருவரும் சேர்ந்து இந்தப் பெண்களுக்கு சாப்பாடு கொடுத்து, போதை மருந்து செலுத்தியும் தூங்க வைத்தும் அவர்களை தொல்லை செய்து கொண்டே இருக்கின்றனர். 

இவ்வாறாக நட்டி எதற்காக இந்தப் பெண்களைக் கடத்தினார்?, இதனைத் தொடர்ந்து நடப்பது என்ன? இந்தப் பெண்கள் எப்படி நாட்டியிடமிருந்து தப்பித்தார்கள்..? இறுதியில் நடந்தது என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதிலாக இப்படத்தினுடைய மீதிக்கதை அமைந்துள்ளது.


நடிகர்களின் நடிப்பு

இப்படத்தின் மூலமாக ஒரு சைக்கோ வில்லனை ஒத்த கதாபாத்திரத்தில் அறிமுகமாகி ஹீரோவா, வில்லனா என ரசிகர்களை குழம்ப வைக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் நட்டி நட்ராஜ். 

மேலும் சுதந்திரமாக அலப்பறை பண்ணி திக்குத் தெரியாமல் மாட்டிக் கொள்ளும் ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட நான்கு பெண்கள் கதைக்குத் தேவையான நடிப்பை அமோகமாக வழங்கியிருக்கிறார்கள் என்று கூறலாம்.

அத்தோடு நட்டியை திமிராக எதிர்கொள்வது, தன் அம்மாவை மிஸ் செய்து அழுவது என ஷில்பா மஞ்சுநாத் நம்மை பெரிதும் கவர்ந்துள்ளார்.

நிறை, குறை

இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் மொட்டை ராஜேந்திரன் திடீரென படத்தில் தோன்றி காமெடி செய்து சென்று ரசிகர்களை பெரிதும் சோதிக்கின்றார். 

மேலும் கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாமல் செல்லும் திரைக்கதையானது இரண்டாம் பாதியில் கொஞ்சம் நம்மை தெளிய வைத்து கதையை புரிய வைக்கின்றது.

அதேபோன்று கார்த்திக் ராஜா இசையும் அந்தளவிற்கு நன்றாக இல்லை.

இருப்பினும் போதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பது சிறப்பான ஒரு விடயம். 

ஆனால் இறுதியில் வரும் மிகப் பெரும் திருப்பம் படம் பார்க்கும் ரசிகர்களை ஏமாற்றிய உணர்வைத் தருவதுடன், படத்தில் இருக்கும் ஓட்டைகளையும் நம்மைக் கேள்வி கேட்க விடாமல் தடுக்கிறது.

தொகுப்பு 

மொத்தத்தில் இப்படம் த்ரில்லிங் கதையில் அமைந்திருந்தாலும் சொல்லும் படியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். 

Advertisement

Advertisement