பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க நானும் பொம்மை... நீயும் பொம்மை டாஸ்கில் தனலட்சுமி மீது அசீம், ஷெரினா ஆகியோர் சொன்ன அடுக்கடுக்கான புகார்களுக்கு நேற்று குறும்படம் போட்டு பதிலடி கொடுத்தார் கமல்ஹாசன். எனினும் குறிப்பாக ஷெரினா ஓவர் ஆக்டிங் செய்ததையும் வெளிச்சம் போட்டு ரசிகர்களுக்கு காட்டினார்.
இவ்வாறு இருக்கையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் கமலின் பார்வை ஆயிஷா பக்கம் திரும்பி உள்ளது போல் தெரிகிறது. அதாவது நானும் பொம்மை... நீயும் பொம்மை டாஸ்கில் ஆயிஷா வேண்டுமென்றே ரச்சிதாவின் பொம்மையை வெளியேற்றி விட்டு, தனக்கு எதுவும் தெரியாதது போல் நடித்தார். முதல் மறுத்த ஆயிஷா பின் உண்மையை சொல்கின்றார். அதனை சுட்டிக்காட்டி கேட்ட கமல்ஹாசனிடம் தான் அசீம் சொன்னதால் தான் அப்படி சொய்ததாக கூறுகிறார் ஆயிஷா.
இதன்மூலம் நேற்று ஷெரினாவை வறுத்தெடுத்தது போல் இன்று ஆயிஷாவை கமல்ஹாசன் வறுத்தெடுத்துள்ளார் போல தெரிகிறது. இதனால் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோ சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!