• May 04 2024

விழுந்து விழுந்து சிரிக்க சந்தானத்தின் 'டிடி ரிட்டர்ன்ஸ்'... திரைவிமர்சனம் இதோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

காமெடியனாக ககலக்கி வந்த சந்தானம் தற்போது நாயகனாகவும் அசதி வருகின்றார். அந்தவகையில் இவர் நடிப்பில் தற்போது 'டிடி ரிட்டர்ன்ஸ்' என்ற படம் உருவாகியுள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாசூம் சங்கர், ஃபெசி விஜயன்,  மாறன், பிரதீப் ராவத், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த் எனப் பலரும் நடிக்கின்றனர்.

மேலும் முன்னதாக சந்தானம் நடித்து வெளியாகியிருந்த தில்லுக்கு துட்டு படத்தின் 3வது பாகமாக  இப்படம் அமைந்துள்ளது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியிருந்த இப்படமானது இன்றைய தினம் தியேட்டர்களில் வெளியாகி இருக்கின்றது. எனவே திரைவிமர்சனம் குறித்துப் பார்ப்போம். 


கதைக்களம் 

அந்தவகையில் முன்னொரு காலத்தில் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பங்களா அமைந்திருந்தது. அங்கே சூதாட்டத்தை தொழிலாக கொண்டு, அந்தப் போட்டியில் தோற்பவர்களின் உயிரைப் பறிக்கும் குடும்பத்தினர் ஊர் மக்களால் எரித்துச் சாம்பலாக்கப்படுகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க தற்போது பாண்டிச்சேரியின் ஊர் பெரிய மனிதரான பெப்சி விஜயனிடம் இருந்த பணம், நகை உள்ளிட்டவை பிபின், முனிஷ்காந்த் குழுவால் எதிர்பாராத நேரத்தில் கொள்ளையடிக்கப்படுகிறது.  இவ்வாறு ஒருபக்கம் பிபின் போதைப்பொருள் பிசினஸின் வாயிலாக சம்பாதிக்கும் பணத்தை திருட மொட்டை ராஜேந்திரன் குரூப் முயற்சி செய்கிறது. 

அதேபோன்று மறுபுறம் சுரபியை பிரச்சினையில் இருந்து காப்பாற்ற சந்தானத்துக்கு ரூ.25 லட்சம் பணம் அவசரமாக தேவைப்படுகிறது. இப்படியான ஒரு சூழ்நிலையில் பிபின் குழு கொள்ளையடித்த பணம், நகை மொட்டை ராஜேந்திரன் குழுவால் கைப்பற்றப்படுகிறது. 

ஆனால் கைப்பற்றிய அடுத்த நிமிடமே அது சந்தானம் வசமாகிறது. இதனையடுத்து சந்தானம் சுரபியை மீட்கிறார். இந்நிலையில் போலீஸூக்கு பயந்து மீதமுள்ள பணம், நகைகளை சந்தானத்தின் நண்பர்களான மாறன், சைதை சேது இருவரும் அந்த பங்களாவில் கொண்டு போய் வைத்து விட்டு வருகின்றனர்.

மேலும் பேராசை மனிதர்கள் பேய்களாக அலையும் அந்த பங்களாவில் கேம் விளையாடி வென்றால் பணம்.. இல்லையெனில் அவர்களின் உயிர் பறி போகும் என்ற ஒரு நிலைப்பாடு இருக்கிறது. இதனை சந்தானம் தொடங்கி மொட்டை ராஜேந்திரன் வரை அனைவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதிலாக இப்படத்தினுடைய மீதிக் கதை அமைந்துள்ளது.


நடிகர்களின் நடிப்பு

இப்படத்தினுடைய முக்கிய நோக்கமாக ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது அமைந்துள்ளதால் அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பினை கொடுத்துள்ளார்கள்.

அதிலும் குறிப்பாக சந்தானம், ரெடின் கிங்ஸ்லி, பெப்சி விஜயன், மாறன், சைதை சேது, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், பிபின் எனப் பலரும் தங்களது நகைச்சுவை திறன் மூலம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றனர்.

அதேபோன்று வித்தியாசமான பேயாக வில்லன் நடிகர் , பிரதீப் ராவத் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார்.

அதுமட்டுமல்லாது சுரபிக்கு பெரிய அளவில் படத்தில் வேலையில்லை என்றாலும் கதையின் போக்குக்கு ஏற்ப அவரும் சிறப்பாக நடித்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.


ப்ளஸ் 

பேய்ப் படம் என்பதை மறந்து ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவிற்கு திரைக்கதை சிறப்பாக அமைந்துள்ளது.

அதுமட்டுமல்லாது ஆங்காங்கே டைமிங் டயலாக்குகளும் அட்டகாசமாக இருக்கிறது. 

மேலும் பேயிடம் சென்டிமென்ட் பாடல், பக்தி பாடல் போட்டு காட்டுவது, யூட்யூப் விளம்பரத்தை நக்கலடிப்பது என ரசிகர்களை நுனி சீட்டில் இருந்து ரசிக்க வைக்கிறது.

அதேபோன்று பின்னணி இசையும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. 

தொகுப்பு 

ஆகவே மொத்தத்தில் இப்படம் சந்தானத்துக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

Advertisement

Advertisement

Advertisement