• Sep 25 2023

'காவாலா..' பாடலுக்கு ஜிபி முத்து செய்த வேலை... நெகடிவ் கமெண்டுகளைக் குவிக்கும் ரசிகர்கள்... வீடியோ இதோ..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் 'பிக்பாஸ்'. இந்த நிகழ்ச்சியின் சீசன் 6இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஜிபி முத்து. 


இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாகவே யூடியூப் மற்றும் பிற சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலமாக ரசிகர்கள் மனதைக் கொள்ளை அடித்திருக்கின்றார். அதாவது இவரது பேச்சுக்கும், நையாண்டியான வசனங்களுக்கும் என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.


பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்தாலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்களை பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றார். 


இந்நிலையில் தற்போது ரஜினி மற்றும் தமன்னா நடிப்பில் 'ஜெயிலர்' படத்திலிருந்து வெளியான 'காவலா' பாடலுக்கு குதிரை மேல் உட்கார்ந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். அவர் மட்டுமல்லாது அவரைச் சார்ந்த மேலும் ஒரு சிலரையும் அந்தக் குதிரையில் ஏற்றி சவாரி செய்யும்படி அமைந்த வீடியோவை வெளியிட்டிருக்கின்றார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் எப்போதும் போலவே இப்போதும் எதிர்மறையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement