• Sep 25 2023

பக்திப் பரவசமாக மாறிய Super Singer மேடை... பாடல் பாடி அசத்திய சிறுவர்கள்... சூப்பரான Promo வீடியோ இதோ..!

Prema / 6 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இதனை பிரியங்கா மற்றும் மகாபா தொகுத்து வழங்கி வருகின்றனர்.


இவர்கள் இருவரும் நகைச்சுவை நிறைந்த தமது பேச்சுக்களினால் நிகழ்ச்சியைப் போரடிக்காது கொண்டு சென்று வருகின்றனர். அந்தவகையில்  senior super singer-9 இடம்பெற்று முடிந்தமையைத் தொடர்ந்து தற்போது சிறியவர்களுக்கான 9-ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் டிவோஷனல் ரவுண்டு இந்த வாரம் ஒளிபரப்பப்படவுள்ளது. அதில் மேக்னா என்ற சிறுமி "மாரியம்மா மாரியம்மா.." என்ற பாடலைப் பாடி அரங்கத்தையே பக்திப் பரவசத்தில் மெய் சிலிர்க்க வைக்கின்றார்.


அதேபோல் மற்ற சிறுவர்களும் பல பக்திப் பாடல்களை புத்தம் புதிய பிரமாண்ட மேடையில் சூப்பராக பாடியுள்ளனர். இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement