• Sep 21 2023

வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட மகளின் உடல்... கண் கலங்கி நிற்கும் விஜய் ஆண்டனி குடும்பம்... ஆறுதல் சொல்லக் குவியும் பிரபலங்கள்..!

Prema / 2 days ago

Advertisement

Listen News!

நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டையில் டிடிகே சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரது மகள் மீரா(16) சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்த நிலையில் நேற்று படுக்கைக்கு சென்ற மீரா தனது துப்பட்டாவால் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.


இதனையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது மீராவின் பிரேத பரிசோதனைகள் முடிவடைந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து உடலானது அவரது இலலத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணா சாலை வழியாக அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.


இந்நிலையில் அங்கு அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை அல்லது நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் அவரது உடல் புதைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

மேலும் கலங்கி நிற்கும் விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லும் நோக்கில் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement