• Aug 11 2025

கர்ணன் பின் மீண்டும் கூட்டணி தனுஷ்- மாரி செல்வராஜ்...!வெளியான தகவல் இதோ..!

Roshika / 2 weeks ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பைசன்’ திரைப்படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படம், ஒரு கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது. சமூக அக்கறை மிக்க கதைகளை காமெரா கண்களில் கொண்டு வருவதில் முக்கிய இடம் பிடித்துள்ள மாரி செல்வராஜ், இந்த படத்தின் மூலம் மேலும் ஒரு கட்டத்தை எட்டுகிறார்.


‘பைசன்’ திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படம் அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தனது அடுத்த திரைப்படம் குறித்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். நடிகர் தனுஷ் நடிக்கும் இந்த திரைப்படம், அவரின் 56வது படம் ஆகும். ‘வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.


மாரி செல்வராஜ் கூறுகையில், “கர்ணன் படத்தின் போது இந்த படத்திற்கு ஒப்பந்தமாகி இருந்தோம். இப்போதுதான் அதற்கான நேரம் வந்துள்ளது. பைசன் படத்தை தொடர்ந்து இந்த தனுஷ் படம் உருவாகும். இது என் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement