• Jul 22 2025

வெளியானது ‘Avatar: Fire and Ash’ படத்தின் சூடான அப்டேட்..! என்ன தெரியுமா.?

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

‘அவதார்’ திரைப்படம் என்றாலே உலக ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த ஒரு படைப்பு. புகழ்பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படைத்த ஒரு பிரம்மாண்ட கற்பனை உலகம். 2009-ல் வெளியான முதல் பாகம் உலகம் முழுவதும் 2.9 பில்லியன் டாலர்கள் வசூலித்தது. 


அதனைத் தொடர்ந்து 2022-ல் வெளிவந்த இரண்டாவது பாகமான ‘Avatar: The Way of Water’ மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இந்நிலையில், மூன்றாவது பாகமாக ‘Avatar: Fire and Ash’ என்ற தலைப்பில் வரும் அடுத்த படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

‘Avatar: Fire and Ash’ படத்தின் புதிய அதிகாரபூர்வ போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர், ஜூலை 25ம் தேதி வெளியாக உள்ள 'The Fantastic Four: First Steps' திரைப்படத்துடன் திரையரங்குகளில் எக்ஸ்கிளூசிவாக வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


இதன் மூலம் ரசிகர்களுக்கு 'Fire and Ash' படத்தின் ட்ரெயிலரை திரையில் பார்க்கும் வாய்ப்பு முதன்முறையாக கிடைக்க உள்ளது. இதனால், மார்வெல் ரசிகர்களும், அவதார் ரசிகர்களும் ஒரே நேரத்தில் திரையரங்குகளுக்கு விரைந்து செல்லும் சந்தர்ப்பமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இப்படம் டிசம்பர் 19 திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement