• May 05 2024

பொன்னியின் செல்வனுடன் முட்டி மோதிய தனுஷ்... 4ஆம் நாளில் பெற்ற வசூல் விபரம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்புக்களில் ஒன்றாக 'பொன்னியின் செல்வன்' உருவாகி இருக்கின்றது. இதற்கான காரணம் என்னவெனில் இப்படத்தை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இயக்குநர்கள் எடுக்க முயன்றனர். ஆனாலும் அவர்களால் முடியவில்லை.

இந்தநிலையில் தான் தற்போது மணிரத்னம் தனது விடாமுயற்சியால் வெற்றிகரமாக அப்படத்தை எடுத்து முடித்துள்ளார். குறிப்பாக சுமார் 800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படமானது இரண்டு பாகங்களாக அமைந்திருக்கின்றது.

அதன்படி இப்படத்தின் உடைய முதல்பாகம் ஆனது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.

இப்படமானது தமிழ் சினிமாவின் பெருமைமிக்க படைப்பாக கருதப்படுவதனால் இப்படத்துடன் பிற நடிகர்களின் படங்கள் மோதுவதை தவிர்த்து வந்த நிலையில், தனுஷின் 'நானே வருவேன்' படம் மட்டும் அப்படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய உள்ளதாக முன்னரே அறிவித்திருந்தனர் படக்குழுவினர்.


இருப்பினும் இதற்கு தனுஷ் ரசிகர்கள் கூட கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அது எதையுமே கண்டுகொள்ளாத அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு, பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக 'நானே வருவேன்' படத்தை ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருந்தார். 

அதாவது "வரிசையாக 9 நாட்கள் விடுமுறை வருவதால் அதனை மிஸ் பண்ண விரும்பவில்லை என்றும் அதனால் தான் நானே வருவேன் படத்தை தற்போது ரிலீஸ் செய்வதாகவும்" கூறி இருந்தார் தாணு.

பெரிய அளவில் புரமோஷன் எதுவும் இன்றி ரிலீஸ் ஆன இப்படமானது முதல் நாளில் ரூ.10.5 கோடி வசூலினை வாரிக் குவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 


ஆனால் மணிரத்னத்தின் கனவுப்படமான 'பொன்னியின் செல்வன்' படம் ரிலீஸ் ஆனதால் நானே வருவேன் படத்தின் 2-ம் நாள் வசூல் மரண அடி வாங்கி உள்ளது. அதாவது இப்படம் 2-ஆம் நாளில் ரூ.4 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதல் நாளோடு ஒப்பிடுகையில் இது 60 சதவீதம் குறைவாகும். 

இந்நிலையில் தற்போது நான்காம் நாள் வசூல் பற்றிய விபரம் ஆனது வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் இந்த திரைப்படம் 4 நாள் முடிவில் ரூ. 20 கோடி உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.


பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படம் மொத்தமாக எவ்வளவு வசூலிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement