• Oct 23 2025

திரைக்கு வந்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய "பைசன்"... நடந்தது என்ன.?

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி, நடிகர் துருவ் விக்ரம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பைசன்’ நேற்று திரையரங்குகளில் வெளியானது. கபடி வீரனை மையமாக கொண்ட முக்கியமான விசயங்களைத் தொட்டுச் செல்லும் இந்த திரைப்படம், திரையரங்குகளுக்கு வந்த முதல் நாளிலேயே புதிய சர்ச்சையில் சிக்கி வருகிறது.


இத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள், குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளன என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை கண்டித்து, சத்திரிய சான்றோர் படை என்ற அமைப்பினர் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

'பரியேறும் பெருமாள்' மற்றும் 'கர்ணன்' திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், சமூக நியாயங்களை சினிமாவிற்குள் கொண்டு வருவதில் புகழ்பெற்றவர். அவர் தனது படங்களில் சமூகத்தின் குரலை ஒலிக்கச் செய்கிறார். அவ்வாறே 'பைசன்' என்ற இந்த புதிய படமும் அரசியல் கருத்துகளும் விளையாட்டையும் முதன்மைபடுத்தியதாக காணப்படுகிறது.


துருவ் விக்ரம் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், அவருடன் இணைந்து பல முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். திரைப்படம் வெளியாகிய பின், சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சிலர் கபடியை சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார் என பாராட்டுகிறார்கள், மற்றவர்கள் சில காட்சிகள் பாகுபாடு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறுகிறார்கள்.

Advertisement

Advertisement