• Jun 04 2023

இந்த ரீசனுக்காக தான் என்னை விட்டிட்டு போனாங்க அவர் மட்டும் தான் காரணம்- சம்யுக்தாவைப் பிரிந்த விஷ்ணுகாந்த் முதன் முறையாக கொடுத்த பேட்டி

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் சம்யுக்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய  சீரியல்களில் ஒன்றான 'சிப்பிக்குள் முத்து' நடித்து அதே சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தத்தை காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தில், பல சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இவர்களுக்கு திருமணம் ஆகி, ஒரு மாதமே ஆகும் நிலையில்இன்ஸ்டாகிராமில் இருந்து திடீர் என தங்களின் திருமண புகைப்படத்தை நீக்கியுள்ளதால், கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் மாறி மாறி தமது சமூக வலைத்தளங்களில் பதிவுகளைப் போட்டு வருகின்றனர். அந்த வகையில் விஷ்ணுகாந்த் பிரபல சேனலுக்க பேட்டியளித்துள்ளார்.அதில் சம்யுக்தா என்னைப் பற்றி எதற்காக இப்படிப் பதிவுகள் எல்லாம் போடுகின்றார் என்று சத்தியமா எனக்குத் தெரியல.

நாங்க பழகும் போது தனக்கு அப்பா இல்லை அவர் இரண்டாவது கல்யாணம் பண்ணிட்டார் அவர் கூட தொடர்பில்லை என்று சொன்னா. நானும் சரி என்று எதவுமே எதிர்பார்க்காமல் என்னுடைய செலவிலையே கல்யாணத்தை பண்ணி முடிச்சேன் நகையோ எதுவுமோ வாங்கல.ஆனால் கல்யாணத்திற்கு அவங்க அப்பா வந்து நின்றாரு.நாங்க சென்னைக்கு வந்த நாள இருந்து அவ வீட்டை விட்டுப் போகும் வரை அவர் வந்திட்டே இருந்தாரு. என்ன உங்க அப்பா கூட பேசிறதே இல்லை என்றேன் இப்போ வந்திட்டே இருக்காரு என்று கேட்க அவர் இப்போ தான் என் கிட்ட பேசிறாரு என்று சொன்னாங்க.


8 மாதம் காதலிச்சோம் கல்யாணம் பண்ணி 15 நாளிலிலேயே போய்ட்டா, என்ன நடந்திச்சு என்றால் அவளுக்கு ஒரு ப்ரண்ட் இருக்கிறாங்க. அவங்க காரெக்டர் பற்றி எனக்கு சொல்லி இருக்கிறாங்க அதனால் வங்க கிட்ட பேச வேணாம் என்றேன். பேசுவேன் அவங்களை போய் பார்ப்பேன் என்று சொல்லுறாங்க. அவங்க தான் முக்கியம் என்று சொல்லிட்டு தான் கிளம்பி போய்ட்டாங்க.

திரும்ப வருவாங்க என்று நினைச்சேன் ஆனால் அவங்க போனதுக்கு அப்பிறம் என்கிட்ட பேசக்கூட இல்லை.நான் அவங்களை அடிக்கவும் இல்லை துன்புறுத்தவும் இல்லை. என்னைப் பற்றி எதுவும் தப்பா போடாதீங்க. நாங்க விவாகரத்த செய்யிறது பற்றி எந்த முடிவும் எடுக்கல.சம்யுக்தா கிட்டை நேராக இருந்து பேசினாலே இந்த பிரச்சினை எல்லாம் முடிந்திடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement