• May 18 2024

விக்கியின் அம்மா மற்றும் தங்கையை பார்த்துள்ளீர்களா..? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நானும் ரவுடித்தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் விக்னேஷ் சிவன்.

அத்தோடு இவர் அண்மையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார்.அத்தோடு அஜித்தை வைத்தும் படம் இயக்கப்போறார்.

இயக்குநராக இருப்பதை தாண்டி படங்களில் பாடல்கள் எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் விக்னேஷ் சிவன்.

இவ்வாறுஇருக்கையில் சினிமா துறையில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய நடிகர், நடிகைகள் உள்ளனர்.தற்போது அந்த வரிசையில் நயன்-விக்கி தம்பதியினர் இணைந்துள்ளனர்.

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதுமண ஜோடிகளாக வலம் வருகின்றார்கள்.

கடந்த ஜூன் 9ஆம் திகதி கோலாகலமாக இரு வீட்டார் சம்மதத்துடன் மகாபலிபுரத்தில் நட்சத்திர ஹோட்டலில் இவர்களுக்குத் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இவர்களுடைய திருமணம் இந்து சமய பாரம்பரியத்தின் படி தாலிகட்டினார்.அந்தவகையில் சூப்பர்ஸ்டார் ரஜனி காந்த் தாலி எடுத்து கொடுத்தார். முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள திருமணம் நடந்தது .

திருமணம் முடிந்துள்ள நிலையில் மணமக்கள் இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் விக்னேஷ் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை அள்ளி குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், அவருடைய தாய் மற்றும் அவரது தங்கை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement