• Apr 20 2024

நடிகர் தனுஷின் முழு குடும்பத்தையும் பார்த்துள்ளீர்களா..? லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2002ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன் போன்ற பல படங்களில் நடித்தார். தன்னுடைய இயல்பான நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

இவர் நடிகராக மட்டுமன்றி திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் ,திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பல்துறை திறமை கொண்டவராக விளங்குகின்றார்.

இருந்தாலும் தமிழில் ஒரு ஹிட் படத்தை கொடுப்பதற்குள் இவர் சந்திக்காத மோசமான விமர்சனங்கள் இல்லை, உடலமைப்பு, முக பாவனைகளுக்காக மோசமான விமர்சனங்களை பெற்றார்.

அதன்பிறகு அவர் துவண்டு போகாமல் கடின உழைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து ஹிட் கொடுத்தார்.

இப்போது தமிழை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். அண்மையில் ஹாலிவுட்டில் தயாரான தி கிரே மேன் படம் வெளியாகி இருந்தது, மேலும் இதில் நடித்த தனுஷிற்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது.

இதையடுத்து தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் என்ற படம் வெளியாக இருக்கிறது, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் என்கின்றனர்.

மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த தனுஷ் தனது மகன்களை மட்டும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அழைத்து செல்கிறார். மேலும் அப்படி அண்மையில் அவர் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவரது மகன்களும் உள்ளனர்.

அப்பா, அம்மா, அண்ணன் குடும்ப என அனைவருடனும் தனுஷ் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement