• May 06 2024

பாரதிராஜாவின் மகன் மனோஜ்-இன் மகளை பார்த்திருக்கிறீர்களா..? திரையுலகிற்கு அடுத்த ஹீரோயினி ரெடி போல..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் பாரதிராஜா. தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளவர்.

இவ்வாறுஇருக்கையில் இவரின் மகன் தான் நடிகர் மனோஜ் பாரதிராஜா அவர்கள். நடிகர் மனோஜ் அவர்கள், “தாஜ் மஹால்” என்ற படத்தின் மூலமாக நடிகராக களமிறங்கி அவர் அதற்கு பின்னர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.



மேலும், கடைசியாக நடிகர் மனோஜ் பாரதிராஜா நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “மாநாடு” படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா உடன் இருக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார். ஆனால் அது அதிகம் முக்கியத்தும் இல்லாத ரோல் என்பதால் படத்தில் அவர் காட்சிகள் அதிகம் இல்லை, என்று தான் கூற வேண்டும்.



இயக்குநர் பாரதி ராஜாவின் மகனான நடிகர் மனோஜ் பாரதிராஜா சமூக வலைத்தளத்தில் கொஞ்சம் ஆக்டிவாக காணப்படுவார்.அந்தவகையில் அவர் தனது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். 



இந்நிலையில் திடீரென அந்த புகைப்படங்கள் வைரலாக அவரது மகளை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஹீரொயினி ரெடி என கெமண்ட்களை போட்டு வருகிறார்கள்.




Advertisement

Advertisement

Advertisement