• May 02 2024

நடிகர் ஆர்யாவின் மகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- மனைவி சாயிஷா வெளியிட்ட கியூட் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்றும் பிளேபாய் என்றும் அழைக்கப்படும் நடிகர் தான் ஆர்யா.இவர் ஆரம்பித்தில் தேர்வு செய்து நடித்த திரைப்படங்கள் சுமாராக இருந்தாலும் சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

அந்த வகையில் இவர் நடித்த சர்பாட்டா பரம்பரை ,ரெடி ,கேப்டன் ஆகிய திரைப்படங்கள் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.இவர் தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சாயிஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.


சாயிஷா திருமணத்திற்குப் பின்னர் சூர்யாவுடன் இணைந்து காப்பான் படத்திலிலும் ஆர்யாவுடன் ரெடி படத்திலும் நடித்திருந்தார்.இதனை அடுத்து இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் சிலகாலம் சினிமாவை விட்டு விலகி இருக்கின்றார்.

இந்த நிலையில் தனது மகள் மற்றும் அம்மாவுடன் இணைந்து சுற்றுலாவுக்கு சென்றுள்ளார்.சுற்றுலாவுக்கு சென்றபோது எடுத்த வீடியோவையும் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதில் இவருடைய மகளும் இருக்கின்றார்.இருப்பினும் மகளின் முகம் இதில் தெரியாமல் போய்விட்டது. 


Advertisement

Advertisement

Advertisement