• Sep 30 2023

அட இத கவனிச்சீங்களா? 'ஜெயிலர்' பட வெற்றிக்காக நெல்சனுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு? அவரே சொன்ன விஷயம்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படம் உலகமெங்கும் வசூல் மழை பொழிந்து வருகிறது. நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் திரையரங்குகளில் 2 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருவதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. 


சமீபகாலமாக ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இயக்குநருக்கோ, நடிகருக்கோ தயாரிப்பாளர்கள் கார் பரிசளித்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் நெல்சனுக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார் பரிசளிக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் நெல்சனே அதுகுறித்து பேசி இருக்கிறார்.


ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சனை அப்படத்தில் காமெடியனாக நடித்த ரெடின் கிங்ஸ்லி பேட்டி ஒன்று எடுத்தார். அந்த பேட்டியில் ரெடின் கேட்ட பல கலாட்டாவான கேள்விகளுக்கு நெல்சன் பதிலளித்தார்.

 அதில் ஒரு கேள்வி தான் இந்த கார் பரிசு விவகாரம். வீட்டு வாசலில் ரோல்ஸ் ராய்ஸ் கார் நிக்குதாமே என ரெடின் கேட்டவுடன் ஷாக் ஆன நெல்சன், அதை நானும் கேள்விப்பட்டேன், நடந்தா சந்தோஷம் என தன் ஆசையை சைடு கேப்பில் கூறிவிட்டார்.


இதன்மூலம் தனக்கு இன்னும் எந்த பரிசும் வழங்கப்படவில்லை என்பதை சூசகமாக தெரிவித்த நெல்சன், ரெடினை தன் பங்கிற்கு கலாய்க்கும் விதமாக, ஜெயிலர் வெற்றியால் அனைவருக்கு டிவி பரிசாக வழங்கப்பட இருப்பதாக, நெல்சன் கூறியதுடன், ஷாக் ஆன ரெடின், சரி நீ என்ன பண்ண போற எங்களுக்கு என நெல்சனை கேட்க, அவரோ, ஆளுக்கு ஒரு முத்தம் கொடுக்கிறேன் வாங்கிக்கோங்க எனக்கூறி அந்த பேட்டியை காமெடி கமாக்கினார்.


Advertisement

Advertisement

Advertisement