சூரி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ‘மண்டாடி’ திரைப்படம், 25 நாட்களில் உலகளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரித்துள்ள ‘மண்டாடி’ படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கு இடையே நடைபெறும் பரபரப்பான படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘மண்டாடி’, ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்திற்கு கிடைத்த நேர்மறையான விமர்சனங்களை தொடர்ந்து பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டன. தற்போது 25-வது நாளை கடந்துள்ள இப்படம், 4-வது வாரத்திலும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்நிலையில், ‘மண்டாடி’ திரைப்படம் உலகளவில் ரூ.150 கோடியையும், தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியையும் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதன் மூலம் சூரி நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக ‘மண்டாடி’ புதிய சாதனையை படைத்துள்ளது.
இதனிடையே, வரும் 8-ம் தேதி இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
The #Mandaadi Victory is getting more thunderous! 🔥💥
The Biggest Blockbuster of the Year, #Mandaadi, has crossed ₹100+ Crores Gross in Tamil Nadu, while the Worldwide Gross has surpassed ₹150+ Crores! 🔥
The #Mandaadi Vaigaiyara Celebrations are only getting BIGGER! ⚓💥 The Thiruvizha continues! 🥁🔥
#BlockbusterMandaadi is Running Successfully in Theatres 🎬🔥
@sooriofficial #Suhas #Sathyaraj @Mahima_Nambiar
@RavindraVijay1 @MithunJS5
@bala_actor @Kritika_Bala
@elredkumar
@rsinfotainment @MathiMaaran @gvprakash @PeterHeinOffl @dhilipaction @maheshmathewMMS @pavijaypoet #VMmahalingam @JayashreeRD @ra_vaaheesan #AmeerJamalKhan @Azarchoreo @srkathiir @KiranDrk @pradeepERagav @magesh_ggg #thiralsankar @MohanaVasanthan @mani_rsinfo @dineshmoffl
#Ronexxavier #srinath
@AKunjamma @ikrishhassan @mudwayrecords @ProRekha #digitallypowerful
Listen News!