• Oct 05 2024

400 கோடியை தாண்டியதா கல்கி ? படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ போஸ்டர் !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

பெரிய அளவு பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படங்களின் வசூல் என்பதும் அதிகமாகவே காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் வெளியாகிய கல்கி திரைப்படத்தின் இன்றய வசூல் குறித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.


நாக் அஸ்வின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம்  கல்கி 2898 AD ஆகும். இப்படத்தில் அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , பிரபாஸ் , தீபிகா படுகோன் , திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே குறித்த திரைப்படம் வெளியாகிய முதல் நாளில் 198 கோடிக்கு மேலும் இரண்டாவது நாளில் 295 கோடியும் வசூல் செய்திருந்தது. இவ்வாறு இருக்கையில் குறித்த திரைப்படம் இன்றுடன் சேர்த்து 3 நாட்களில் 415 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement