• May 05 2024

கடைசி நிமிடத்தில் ஹரிவைரவன் கூறிய அந்த வார்த்தை... கதறிக் கண்ணீர் வடிக்கும் மனைவி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சுசீந்தரன் இயக்கத்தில் வெளியான 'வெண்ணிலா கபடி குழு' என்ற படத்தின் மூலம், காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர் ஹரி வைரவன். இப்படத்தினைத் தொடர்ந்து 'குள்ளநரி கூட்டம், நான் மஹான் அல்ல' போன்ற படங்களில் நடித்திருந்தார்.


இவ்வாறாக படங்களில் நடித்து வந்து கொண்டிருந்த நேரத்தில் ஏற்கனவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஹரி வைரவனுக்கு திடீர் என, கை கால்கள் வீங்க தொடங்கியது. இதை தொடர்ந்து, மருத்துவரை அணுகியபோது, உடலில் பல டெஸ்ட் எடுத்து பார்த்து விட்டு உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை என கூறியுள்ளனர். 

இருப்பினும் தொடர்ந்து இந்த பிரச்சனை அவருக்கு இருந்து கொண்டே இருந்ததால், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஹரி வைரவனால், அதிகம் செலவு செய்து தனியார் மருத்துமனையில் சிகிச்சை எடுக்க முடியாத நிலை ஏற்படவே, அரசு மருத்துவமனையையே நாடி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


பின்னர் ஒருமுறை தூங்கி கொண்டிருக்கும் போதே ஹரி வைரவன் கோமா நிலைக்கு சென்று விட்டார். இதன் காரணமாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவரின் சிகிச்சைக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த, பிளாக் பாண்டி, சூரி, கார்த்தி, விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் உதவி செய்துள்ளனர். 

எது எவ்வாறாயினும் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து, நடக்க முடியாத நிலையில் இருந்த வைரவனை குழந்தை போல் அவருடைய மனைவி பார்த்து கொண்டார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, இன்று அதிகாலை 12:15 மணிக்கு உயிரிழந்துள்ளார் ஹரிவைரவன். இது குறித்து அவரின் மனைவி வைரவனின் கடைசி தருணங்கள் தொடர்பாக பகிர்ந்து கொண்டார்.


அந்தவகையில் எப்போதும் போல், இரவு உணவு அருந்திவிட்டு மாத்திரை, மருந்துகளை எடுத்து கொண்ட ஹரி வைரவன், தூங்க செல்லும் முன் தன்னுடைய மனைவி கவிதாவுடன், பேசி கொண்டிருந்தாராம். பின்னர் தனக்கு உடல்நிலை ஒரு மாதிரி இருக்கிறது என கூறியுள்ளார். உடனே கவிதா அவரை ஆசுவாச படுத்தி, படுக்க வைத்துள்ளார். பின்னர் திடீரென மயக்க நிலைக்கு சென்ற இவர், தன்னுடைய இறுதி மூச்சையே விட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக அவருடைய மரணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும்  தெரிவித்துள்ளார். மேலும் இவருடைய இறுதி சடங்குகள் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இவரின், மரணத்தை அறிந்த பிரபலங்கள் உட்படப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement