• May 05 2024

ஹப்பி பேர்த்தடே அண்ணோய்- நடிகர் விஜய்க்கு முதல் ஆளாக பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த பிரபல சீரியல் நடிகை

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக திகழ்ந்துவருகிறார் விஜய். அவரது படங்கள் அசால்ட்டாக நூறு கோடி ரூபாயை தாண்டி வசூலித்துவருகின்றன. இதன் காரணமாக விஜய்யை நம்பி எவ்வளவு வேண்டுமானாலும் பட்ஜெட் போடலாம் என்ற எண்ணம் தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. 

அவர் தற்போது நடித்துவரும் லியோ படம்கூட 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பட்ஜெட்டில் உருவாகிவருவதாக கூறப்படுகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் பாலிவுட்,கோலிவுட்சேர்ந்த திரை நட்சத்திரங்கள் களமிறங்கியிருக்கின்றனர்.


அனிரூத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.படத்தின் பிஸ்னெஸ்ஸும் இதுவரை 400 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் விஜய் இன்றைய தினம் தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் இவருக்கு மிஸ்டர் மனைவி சீரியல் நடிகை ஷபானா முதல் ஆளாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இவர் விஜய்யின் தீவிர ரசிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement