• Feb 02 2023

பிரபல OTT-யில் ஹன்சிகாவின் திருமண நிகழ்வு...வெளியான சூப்பர் அப்டேட்..!

Listen News!
Aishu / 2 weeks ago
image

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தவர் தான் ஹன்சிகா மோத்வானி.2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக  ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார்.

மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2 உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள ஹன்சிகா  மோத்வானி, நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி  ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.


ஹன்சிகா மோத்வானியின் திருமணத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். அத்தோடு , இவர்களின் திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்  வைரலாகியது.


ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஹன்சிகா - சோஹேல் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அத்தோடு திருமணத்திற்கு பிந்தைய Pehli Rasoi சடங்கில் ஹன்சிகா மோத்வானி பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.


இவ்வாறுஇருக்கையில்  ஹன்சிகா மோத்வானியின் திருமண வீடியோ, பிரபல டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Love Shaadi Drama என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. பிரத்யேக போஸ்டரில் கணவருடன் ஹன்சிகா மோத்வானி காரில் இருக்கும் புகைப்படமும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.



Advertisement

Advertisement

Advertisement