• May 20 2024

லிட்டில் சூப்பர் ஸ்டாராக மாறும் ஜிவி பிரகாஷ் - வெளியான வேறலெவல் லேட்டஸ் அப்டேட் இதோ!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், முன்னணி இசையமைப்பாளராகவும் கலக்கி கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் என்னதான் நடிகராக தற்போது நடித்தாலும், இவருடைய ரசிகர்கள் விரும்பி எதிர்பார்ப்பது இவருடைய இசையை மட்டுமே. அதனாலேயே தொடர்ந்து பல படங்களுக்கு தரமான பாடல்களை கொடுத்து வருகிறார்.

 தற்போது பிஸியாக அதிகமான படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகி உள்ளார். 

இவரது  இசையில் ’கேப்டன் மில்லர்’, ’மார்க் ஆண்டனி’, ’தங்கலான்’, ’எமர்ஜென்சி’, ’ஜப்பான்’, ’மிஷன் சாப்டர் ஒன்’, ’கள்வன்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. அதேபோல் அவரது நடிப்பில் ’இடி முழக்கம்’ ’13’ ’அடியே’ ’டியர் ’ஆகிய படங்களும் தயாராகி வருகிறது.

அந்தவகையில் கவிதாலயா தயாரிப்பில் நடிகர் ஜீவி பிரகாஷ் ஒரு படம் நடிக்க இருக்கிறார் இந்தப் படத்தின் டைட்டில் லக்கி சூப்பர் ஸ்டார் என வைத்திருக்கிறார்கள் .அதாவது ரஜினி நடித்த ''ராஜா சின்ன ரோஜா'''என்ற படத்தில் குழந்தைகள் அனிமேஷன் கலந்த இந்த படத்தை உருவாக்கி இருப்பார்கள்.அதேபோல் இந்த படமும்  கிட்டத்தட்ட அந்த மாதிரியான ஒரு படம் தான் .இந்த லக்கி சூப்பர் ஸ்டார் படத்தில் சரத்குமார்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.என கூறப்படுகிறது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த லேட்டஸ் அப்டேட்டினை செய்தி விமர்சகர் பிஸ்மி அறிவித்துள்ளார் எனவே மேலதிக தகவல்களுக்காக காத்திருப்போம்.

Advertisement

Advertisement