• Jan 19 2025

கோபிநாத்தின் மேடைப்பேச்சு தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்! விஜய் சேதுபதி பெருமிதம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க எந்த மாதிரி கதாபாத்திரங்கள் வந்தாலும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் நடித்து கொடுத்து வருகிறார். இவர்  தமிழையும் தாண்டி பாலிவுட்டிலும் சில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் .

கோலிவுட், பாலிவுட் என பிஸியாகவே இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி,  நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் ஜவான். அதில் வில்லன் கேட்டபில் நடித்து அசத்தியிருப்பார்.

இந்த நிலையில், தனது இன்ஸ்பிரேஷனுக்கு ஒரு வகையில் கோபிநாத்தின் மேடைப்பேச்சும் காரணம் என நடிகர் விஜய் சேதுபதி சொல்லியுள்ளார்.


அதன்படி, விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளரான கோபிநாத், இந்த துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி இந்த விழாவை கொண்டாடினார்கள். 

அதற்கு நடிகர் ரியோவும் அழைக்கப்பட்டார். அப்போது மேடையில் ஏறி பேசிய ரியோ கோபிநாத்தை  பற்றி சில விஷயங்களை கூறினார்.


அதாவது ஒரு விழாவிற்கு வந்திருந்த விஜய்சேதுபதியை பார்த்ததும் கோபிநாத் ரியோவிடம் ‘விஜய் சேதுபதி கிட்ட பேசனும். ஆனால் தயக்கமாக இருக்கிறது. அவர் பேச்சு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.’ என கூறினாராம்.

உடனே ரியோ விஜய்சேதுபதியிடம் ‘உங்ககிட்ட கோபிநாத் பேசனும்னு ஆசைப்படுகிறார்’ என்று சொன்னதும் அதற்கு விஜய்சேதுபதி ‘ நானே பேசனும்னுதான் இருந்தேன். எனக்கும் தயக்கமாக இருந்தது. அவர் பொதுமேடையில் பேசுகிற பேச்சை கேட்டுத்தான் நானும் இந்தளவுக்கு பேச கற்றுக்கொண்டேன்’ என்று கூறியதாக ரியோ தெரிவித்தார்.

Advertisement

Advertisement