• Jun 14 2026

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய “துரந்தர் 2”..! அதிகாரபூர்வமாக வெளியான மொத்த வசூல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெளியான பல படங்கள் முதல் நாளிலேயே 1 கோடி ரூபாய் வசூலை எட்டுவதற்கே போராடி வரும் நிலையில், துரந்தர் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அதிரடி சாதனையை படைத்து வருகிறது.

ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த படம் உலகளவில் இதுவரை ரூ.1783 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.1360 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் ரூ.423 கோடி வசூல் ஈட்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனை, இந்தி திரையுலகில் இதுவரை எட்டப்படாத உயரமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு Dangal திரைப்படம் உலகளவில் ரூ.2000 கோடி வசூல் செய்திருந்தாலும், அதன் பெரும்பகுதி சீனாவில் இருந்து தான் கிடைத்துள்ளது.


 ஆனால் துரந்தர் 2 இந்தியாவிலேயே 1000 கோடியைத் தாண்டிய முதல் இந்தி படமாக புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் நடித்த ரன்வீர் சிங் அவர்களின் நடிப்பு மற்றும் படத்தின் மாஸ் அம்சங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.

இந்த ஆண்டின் இறுதியில் வெளியாக உள்ள  கிங் படத்தால் இந்த சாதனை முறியடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் ராமாயண படத்திற்கும் இந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement

Advertisement