• May 06 2024

காதலியா? அம்மாவா? குழப்பத்தில் ஹரிஸ் கல்யாண் - 'எல். ஜி. எம்'படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி திருமதி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான டோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் 'எல். ஜி. எம்' (லெட்ஸ் கெட் மேரீட்) எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட வேகமாக நடைபெற்று  வருகிறது.

இந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். அவரே இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 


இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அத்தோடு அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டியை இப்படக்குழுவினர் கண்டு களித்தனர்.


இப்படியான நிலையில் தற்பொழுது 'எல். ஜி. எம்'படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. உலகத்தின் மேல்  ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா ஆகியோர் நிற்பதாக இது மைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement