• May 19 2024

தென்னாபிரிக்காவில் ஜாலியாக ஊர் சுற்றும் கமல்ஹாசன்- வைரலாகும் வீடியோ- எப்படி இருக்கிறார் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் கமல்ஹாசன் பல ஆண்டுகளாக நடித்து வருபவர். அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று ஆரம்பித்த இவரது திரைப்பயணம் தற்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பல தளங்களில் தொடர்ந்து வருகிறது. பல பரிணாமங்களை இவர் தனது நடிப்பின் மூலம் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். வில்லனாகவும், ஹீரோவாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் பலவகைகளில் நடித்து தன்னை மெரூகேற்றிக் கொண்டதுடன் ரசிகர்களையும் கட்டிப் போட்டவர் .


இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கிற்காக வெளிநாடுகளில் உள்ளார் கமல்ஹாசன். தைவானில் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க்கில் இந்தியன் 2 படக்குழுவினர் உள்ளனர். இங்கு அதிரடியாக ரயில் ஆக்ஷன் காட்சிகள் நடத்தப்படவுள்ளன. 


12 நாட்கள் நடைபெறவுள்ள இந்த சூட்டிங்கை முடித்துக் கொண்டு படக்குழுவினர் நாடு திரும்பவுள்ளனர். இந்தப் படத்தின் விக்ரம் படத்தில் இணைந்திருந்த காளிதாஸ் ஜெயராமும் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு முன்பாக தற்போது ரிலாக்ஸ் மோடில் கமல்ஹாசன் காணப்படுகிறார். அவர் இசையமைக்கும் வீடியோவும், ரிலாக்ஸாக இருக்கும் புகைப்படங்களும், விமானத்தில் பறக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் இருந்து வெளியாகியுள்ள கமலின் இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிக உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement