• Jan 19 2025

உங்க அப்பாட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வா... ரோகிணியை தரதரவென இழுத்து வீசிய விஜயா! உடைந்த குடும்பம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ரோகிணி அனுப்பிய ஆள் முத்துவை ப்ரைன் வாஷ் பண்ணி கையில் சரக்கையும் கொடுக்கிறார். ஆனால் முத்து குடிக்காமல் அவரைக் குடிக்க  வைத்து விட்டு அவருக்கு கம்பெனி கொடுக்கிறார்.

முத்துவை காணவில்லை என்றதும் கீழே இறங்கி வந்த மீனா, எல்லா இடமும் முத்துவை தேடுகிறார். இறுதியாக கார் பார்க்கிங் என்று சென்றபோது அங்கு முத்து கையில் சரக்குடன் இருக்கிறார்.

இதை பார்த்து விட்டு ஒன்னும் பேசாமல் மீனா பின்னாடி நிற்க, முத்து அந்த நபரிடம் நீங்க சரக்க கொடுத்துட்டீங்க. உங்களுக்கு கம்பெனி கொடுக்கத்தான் நான் வந்தன். எனக்கு என்ட அப்பாட மரியாதை தான்  முக்கியம். என் பொண்டாட்டிக்கு சத்தியம் பண்ணி இருக்கன்  என்று சொல்லுகிறார். இதை கேட்டு மீனா சந்தோஷப்படுகிறார். அதன் பின்பு முத்துவை அழைத்துக் கொண்டு செல்கிறார்.

முத்துவை பார்த்த அண்ணாமலை எங்க போனா என கேட்க, அதற்கு மீனா அவர் வெளிய பேசிக் கொண்டிருந்தார் என சொல்லுகிறார்.  பிறகு முத்து எங்க மலேசியா சம்பந்தி வந்துட்டாரா? இந்த பாலரம்மா சரியான கேடி.  சொல்றது எல்லாமே பொய் அப்படி என்று அண்ணாமலையிடம் பேசிக்கொள்கிறார். 


இன்னொரு பக்கம் ரோகிணிக்கு பங்க்ஷன் நடந்து கொண்டிருக்க விஜயா,  என்ன பார்த்தா உனக்கு கேணச்சி மாதிரி தெரியுதா? இன்னும் உங்க அப்பா வரல, எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டு இருக்கீங்க அப்படி என்று திட்டுகிறார்.

மறுபக்கம், பங்ஷன் முடிவடைந்ததும் நம்ம வீட்டுக்கு போவோம் என வாய் தடுமாறி சுதா சொல்ல, நாம எங்க வீட்டுக்கு தானே போவோம் என ரவி சொல்லுகிறார். அதற்கு சுதா உங்க வீட்டுக்கு தான் போவீங்க. அதுக்கு முதல் எங்க வீட்டுக்கு வந்துட்டு தான் போகணும் அதுதான் சம்பிரதாயம் என்று சொல்கிறார்.

அதன் பின்பு ரோகிணி பங்க்ஷன் முடிவடைந்ததும் ரோகிணியை கையை பிடித்து தரதரவென இழுத்து வந்த விஜயா, போய் உங்க அப்பா கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு வா என சொல்கிறார். அதற்கு அப்பா தானே இல்ல என்று ரோகிணி சொல்ல, உனக்கு புரியுதுதானே என கண்டபடி திட்டுகிறார்.

அங்கு வந்த அண்ணாமலையும் ஏன் சத்தம் போடுகிறாய் என சொல்ல, ரோகிணி நீங்கதான் என் அப்பா, அம்மா ஸ்தானத்திலிருந்து ஆசீர்வாதம் பண்ணனும் என சொல்லி இருவர் காலிலும் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறார்.

அதன் பின்பு விஜயா பேசியதை நினைத்து ரோகிணி அழுது கொண்டு இருக்க, வித்தியா வந்து அவருக்கு ஆறுதல் கூறுகிறார். மேலும் மனோஜை தனியா அழைத்து போவதற்கு வழிய பாரு என சொல்கிறார்.

இதைத் தொடர்ந்து வித்தியா செட் பண்ணி ஆளிடம் சென்று என்ன நடந்தது என்று கேட்ட போது, அவர் நடந்தவற்றைச் சொல்கிறார். ஆனாலும் அவருக்கு காசு கொடுக்காமல் அவரை திருப்பி அனுப்பி வைக்கிறார் வித்தியா. இது தான் இன்றைய எபிசோட் 


Advertisement

Advertisement