• Jan 19 2025

செழியனுடன் சேர்ந்த ஜெனிக்கு இப்படியொரு திருப்பமா? இறுதியில் பாக்கியா கொடுத்த பதிலடி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஜெனி வீட்டில் இருந்து கிளம்புகிறார். அவரது அம்மா குழந்தையின் ஆடைகளை எடுத்து வைத்து அனுப்புகிறார். ஜோசேப் வெளியே வர இல்லை. ஆனால் ஜன்னல் ஓரமாக நின்று ஜெனி போவதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

இதை தொடர்ந்து பாக்கியா ஜெனியை வீட்டுக்கு கூட்டி போகிறார். காரில் ஜெனியையும், செழியனையும் இருக்க சொல்லிவிட்டு ஆர்த்தி தட்டு எடுக்க பாக்கியா உள்ளே செல்கிறார். 


இதன்போது செழியன் எங்கே எங்கே என கேட்க, யாரும் பதில் சொல்லாததால் வீட்டில் உள்ள எல்லாரையும் பதற்றத்தில் அழைக்கிறார். ஆனால் பாக்கியா வெளியே போய் ஜெனியை அழைத்து வருவதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைகிறார்கள்.

இதையடுத்து ஜெனி வீட்டிற்குள் வந்து, ராமமூர்த்தி, ஈஸ்வரியை நலம் விசாரிக்கிறார். இதன்போது ஆரம்பத்தில் கோவப்பட்ட ஈஸ்வரி, பின்பு அழுகிறார். அதன்பின் குழந்தையை வாங்கிக் கொஞ்சிக் கொள்கிறார்.

இறுதியாக எல்லாரும் குடும்பமாக குழந்தையை கொஞ்சிக் கொண்டு இருக்க, ஜெனி நீங்க தான் செழியனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க பாத்தீங்களா என ஈஸ்வரியிடம் கேட்க, உங்க அப்பாவும் தான் உனக்கு பண்ணி வைக்க பாத்தாரு. அந்த கோவம் தான் என சொல்கிறார். 

பாக்கியா சொன்ன மாதிரியே செழியன், ஜெனியை சேர்த்து வச்சிட்டேன். யாரோ சொன்னாங்க இது நடக்காது என கோபியையும் குத்திக் காட்டுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement