• May 07 2024

கயல் சீரியல் நடிகர் சஞ்சீவ்வின் பிறந்தநாளில் குவிந்த சீரியல் பிரபலங்கள் செய்த சேட்டைகள்- வைரலாகும் வீடியோ

stella / 9 months ago

Advertisement

Listen News!

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. அதிலும் வெள்ளித்திரை நடிகரை விட ரசிகர் சீரியல் நடிகர்கள் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்கள்.


 அதிகம் ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படம், வீடியோ வெளியிடுவது என்று சின்னத்திரை நடிகர்கள் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள் அதிலும் ஒவ்வொரு சேனலிலும் மக்களின் ஃபேவரிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி முக்கிய சீரியல் தான் கயல்.


இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.மற்ற சேனல்களின் சீரியல்கள் இதன் டிஆர்பியை முந்த முடியாமல் திணறி வருகின்றன.


கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஆல்யா சஞ்சீவ்வின் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளதையும் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement