• May 19 2024

கையில் குழந்தையோடு கவின் சொன்ன மகிழ்ச்சி செய்தி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கு கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் கவின். இவர் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர்.

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டதோடு பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அவர் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடித்த லிப்ட் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

எனினும் தற்போது ‘டாடா’என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கி வருகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார்.

அத்தோடு இந்த படத்தில்ஹரிஷ்,புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்து வருகிறார். ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகர் கவின் நடித்து வரும் ‘டாடா’ என்ற படத்தின்  இறுதிகட்ட படப்பிடிப்பு இடம்பெற்று வரும் நிலையில் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வெளியாகி உள்ளது.

அதாவது ‘டாடா’ என்ற படம் வருகின்ற நவம்பர் 18 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அத்தோடு டீசர் மற்றும் மற்றைய அப்டேட்கள் விரைவில் வெளிவரும் என கூறப்படுகின்றது.



Advertisement

Advertisement