• Apr 03 2025

’ஜோஷ்வா’ முதல் நாள் வசூல் இவ்வளவு தானா? ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ விட கம்மியா இருக்கே..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!


கௌதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் வருண் நடிப்பில் உருவானஜோஷ்வா இமைபோல் காக்கதிரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பெரும்பாலான திரையரங்குகளில் கூட்டம் இல்லை என்றும் வசூல் மிகவும் குறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜோஸ்வா இமை போல் காக்கஎன்ற திரைப்படத்தை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கௌதம் மேனன் இயக்கி முடித்த நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு நேற்றுதான் ஒரு வழியாக ரிலீஸ் ஆனது.

இந்த படத்திற்கு ப்ரமோஷன் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பதும் ப்ளூ சட்டை மாறன் உட்பட பல விமர்சகர்கள் யூடியூபில் இந்த படத்தை கலாய்த்து தள்ளினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளத்தில் படம் திருப்தியாக இல்லை என்றும் லாஜிக் மீறல் அதிகமாக இருக்கிறது என்றும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் இயக்கம்,  கிளைமாக்ஸ் நன்றாக இருந்தாலும் படம் பொறுமையை சோதிக்கிறது என்றும் கூறினர்.



இந்த நிலையில் நேற்று முதல் நாளில் தமிழகம் முழுவதும் இந்த படம் வெறும் 9 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்கு செய்யப்பட்ட விளம்பர செலவு கூட முதல் நாள் வசூல் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கேரளாவில் சக்கை போடு போட்டு வரும்மஞ்சுமெல் பாய்ஸ்என்ற திரைப்படம் தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது என்பதும்ஜோஸ்வாபடத்தை விட நேற்று இந்த படம் இரு மடங்கு அதிகமாக வசூல் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement