• Nov 20 2026

3 நாளில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த கங்குவா.? சிங்கத்தின் வசூல் வேட்டை தொடருமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இந்த படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 2000 கோடியை வசூலிக்கும் என இதன் தயாரிப்பாளர் ஞானவேல் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். 

ஆனாலும் தற்போது கங்குவா படத்திற்கு கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில், இருநூறு கோடி ரூபாயை தாண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரலாற்று கதை அம்சமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யா இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார்.

d_i_a

மேலும் பாலிவுட் நடிகர்களான திஷா பதாணி, பாபி தியோல் ஆகியோரும் நடித்துள்ளார்கள். இவர்களுடன் நட்டி, கருணாஸ், கலையரசி, போஸ் வெங்கட், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளார்கள். கங்குவா படத்தில் திஷாபதானியின் கவர்ச்சி தூக்கலாக இருப்பதாக பலரும் தெரிவித்து இருந்தார்கள்.


இந்த நிலையில், கங்குவா படத்தின் மூன்றாவது நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது. கங்குவா வெளியாகி முதலாவது நாளிலேயே 58 கோடிகளை வசூலித்து இருந்தது. 2வது நாளின் முடிவில் 89 கோடிகளை வசூலித்து இருந்தது .

தற்போது மூன்றாவது நாளில் 12 கோடிகளை வசூலித்து மொத்தமாக 100 கோடிகளை கடந்திருக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன . எனினும் இன்றைய தினம் அதிகார்வ பூர்வமாகவே கங்குவா  திரைப்படம் 100 கோடி வசூலை கடந்திருக்கும் என படக் குழு போஸ்டர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement