• Jan 19 2025

கேம் விளையாடச் சொன்னா ஈகோ காட்டுறீங்களா? ஹவுஸ்மேட்ஸை நாறு நாறா கிழித்த விஜய் சேதுபதி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி விஜய் சேதுபதி தலைமையில் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்களும், 9 பெண் போட்டியாளர்களும் பங்கு கொண்டார்கள். தற்போது இந்த நிகழ்ச்சி 40 நாட்களை கடந்துள்ளது.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

d_i_a

இதை தொடர்ந்து நான்கு போட்டியாளர்கள் எலிமினிட்டாகி வெளியே சென்றார்கள். அதன் பின்பு ஆறு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். இவர்களால் சுவாரஸ்யம் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தவித கண்டென்டும் கொடுக்காமல் ரசிகர்களை வெறுப்புக்கு உள்ளாகி வருகின்றார்கள்.


இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் விஜய் சேதுபதி ஜாக்குலினையும் தீபக்கையும் கேள்வி மேல் கேள்வியாக கேட்டு விளாசித் தள்ளுகிறார்.

மேலும் ஒரு டாஸ்க் கொடுத்து விளையாடச் சொன்னா.. உங்களுக்கு உள்ள இருக்கிற ஈகோ தான் வெளியே வருது. அப்படி நீங்க விளையாடுறது நல்லாவே இல்லை என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement