• Apr 14 2026

யாரும் கணிக்க முடியாத தோற்றத்தில் வெளியான 'குபேரா' பட பர்ஸ்ட் லுக்!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தற்போது தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாகவே கொண்டாடப்படுகின்றன.

அவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்கள் மாஸ் வெற்றியைப் பெற்ற நிலையில், கேப்டன் மில்லர் படமும் ஓரளவு வெற்றியை பெற்றது.

தனுஷ் நடிப்பில் ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும் அடுத்தடுத்து வெளி வரவுள்ளது.


இந்த நிலையில், தனுஷின் D51வது படமான குபேரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தாரா நடிக்க கமிட்டாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement