நடிகர் விஜய் நடித்த ‘மாண்புமிகு மாணவன்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதிராஜ். சினிமாவில் அறிமுகமான பின்னர் சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்திய இவர், சன் டிவியில் ஒளிபரப்பான ‘தென்றல்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து ‘அழகு’, ‘தாலாட்டு’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து தனது நடிப்பால் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
சீரியல்களில் பிஸியாக நடித்து வந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் ஸ்ருதிராஜ் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். சக நடிகர்களுடன் இணைந்து காமெடி ரீல்ஸ் செய்வது, தனது புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட் படங்களை வெளியிடுவது என இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ஸ்ருதிராஜ் மருத்துவமனையில் இருந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது வலது காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவருக்கு சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது தான் நலமாக இருப்பதாக கூறியுள்ள ஸ்ருதிராஜ், தனக்கு என்ன ஆனது என அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!