கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதிடும் மற்றொரு வழக்கறிஞராக இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ள நிலையில், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் மீது ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கிய ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் படப்பிடிப்பு பின்னர் முழுமையாக நிறைவடைந்தது. தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து படம் ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. இதனால் படத்தின் புதிய ரிலீஸ் தேதி எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!