• Jan 22 2026

இந்த வார எலிமினேஷனில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவரா.? ஷாக்கில் ரசிகர்கள்

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, தற்போது மிகுந்த பரபரப்புடன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் மெதுவாக சென்ற இந்த சீசன், கடந்த சில வாரங்களாக அதிரடி திருப்பங்களும் எதிர்பாராத முடிவுகளும் காரணமாக ரசிகர்களின் கவனத்தை முழுமையாக கவர்ந்துள்ளது.

குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற பணப்பெட்டி (Money Box) டாஸ்க் இந்த சீசனின் முக்கியமான திருப்பமாக அமைந்தது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பாராத விதமாக கானா வினோத் ரூ.18 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.


பணப்பெட்டி டாஸ்க் தொடங்கிய நாளிலிருந்தே, யார் பணத்தை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. பலரும் கடைசி வரை பொறுத்து கொண்டு அதிக தொகை பெற முயற்சி செய்வார்கள் என நினைத்த நிலையில், கானா வினோத் திடீரென ரூ.18 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த வார எலிமினேஷனில் அரோரா வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், பிக்பாஸ் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் இதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.

Advertisement

Advertisement