விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் ஒருவராக வலம் வருபவர் பாடகி சிவாங்கி. தனது தனித்துவமான குரல் மற்றும் குழந்தைத்தனமான பேச்சால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், ஆரம்பத்தில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் தனது பாடல் திறமையை வெளிப்படுத்த முயன்றார்.
‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியாவிட்டாலும், அந்த நிகழ்ச்சி சிவாங்கிக்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தனது நகைச்சுவையான செயல்பாடுகள், குறும்புத்தனமான பேச்சு மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த சிவாங்கி, குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இதன் பின்னர் திரைப்படங்களிலும் பாடல்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
தற்போது பாடகியாகவும் பிஸியாக இருக்கும் சிவாங்கி, இசை ஆல்பங்கள் வெளியிடுவது, பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளில் பாடுவது என தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இசையைத் தாண்டி போட்டோஷூட்களிலும் ஆர்வம் காட்டி வரும் சிவாங்கி, அவ்வப்போது தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளையும் ஏற்படுத்தி வருகின்றன.
Listen News!