பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 75. அவரது மறைவு பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நானா படேகர், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். தமிழிலும் அவர் ‘பொம்மலாட்டம்’, ‘காலா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கோவாவில் உள்ள தனது வீட்டில் நானா படேகர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், மருத்துவர்கள் சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவ-சட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நானா படேகரின் திடீர் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!