• Mar 27 2023

இரண்டே நாளில் 200 கோடி வசூலை நெருங்கிய பதான் திரைப்படம்- பிளாக் பஸ்டர் ஹிட்டால் குஷியான ரசிகர்கள்

stella / 2 months ago

Advertisement

Listen News!

ஷாருக்கான் நடிப்பில் உருவான பதான் திரைப்படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 'பேஷ்ரம் ரங்' பாடலில் தீபிகா படுகோன் காவி பிகினியில் ஆட்டம் போட, இந்த விவகாரத்தை கையில் எடுத்த ஒருதரப்பினர் பாய்காட் பதான் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். 

ஆனால் ஷாருக்கானின் பதான், பாய்காட் பிரசாரத்தை எல்லாம் அடித்து நொறுக்கியதோடு பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டி வருகிறது. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்க பான் இந்தியா படமாக உருவான பதான் 25ம் தேதி வெளியானது. ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோன், வில்லனாக ஜான் ஆப்ரஹாம் கேமியோ ரோலில் சல்மான் கானும் நடித்துள்ளனர். 


எதிர்பார்த்ததைவிட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பதான் முதல் நாளில் 100 கோடி வசூலை கடந்தது.இந்தியாவில் மட்டுமே முதல் நாளில் 60 கோடி வரை வசூலை எட்டிய பதான், உலகம் முழுவதும் ரூ.106 கோடி கலெக்‌ஷன் செய்துள்ளது. யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால் ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கினர். அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால் பதான் படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்னும் வேகமெடுத்தன. இதனால் முதல் வாரம் முழுவதும் பதான் கலெக்‌ஷன் தாறுமாறாக இருக்கும் என சொல்லப்படுகிறது.


பாய்காட் பதான் என்ற ஹேஷ்டேக் எல்லாவற்றையும் பொய்யாக்கிய ரசிகர்கள், ஷாருக்கானுக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டை பரிசாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் பதான் ரிலீஸான இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் 125 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர் என கடந்தாண்டு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்த படங்களின் சாதனையை, இரண்டே நாட்களில் பதான் செய்து காட்டியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement